ஜூஸ் மிக்ஸரில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

0 332
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 14 திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணி ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 579 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானம் வந்து இறங்கியது, விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பயணி ஒருவர் ஜூஸ் மிக்ஸரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 579 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.