போலி பாஸ்போர்ட்டில் பயணம் 3 பேர் கைது
திருச்சி, ஜூன் 14 திருச்சி சர்வதேச விமான நிலையம் புதிய முனையத்தில், பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் தந்தை பெயரை மாற்றி, திருத்தம் செய்து, மலேசியாவிற்கு மலிண்டோ விமானத்தில் செல்ல முயன்ற, பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் ( 46), அதே போல் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மதுரை வீரன் (48), ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் ஓம்சக்தி நகரை சேர்ந்த சீனி பாஷா (வயது 63) ஆகியோரை, திருச்சி விமான நிலைய குடியேற்ற பிரிவு (இமிகிரேசன்) அலுவலர்கள் பிடித்து, விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.