திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்

0 359
Stalin trichy visit

திருச்சி, ஆக. 12  வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு வாஸ் கோடகாமா- வேளாங்கண்ணி இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள் ளன. இந்த சிறப்பு ரெயில் வண்டி எண்.07361 வருகிற 27-ந்தேதி, அடுத்த மாதம் (செப்டம்பர்) 2 மற்றும் 6-ந்தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டு 3-ம் நாள் மதியம் 1.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல் வருகிற 29-ந்தேதி அடுத்த மாதம் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக் குப் புறப்பட்டு 3-ம் நாள் நள்ளிரவு 12.15 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும் என்று திருச்சி கோட்ட ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.