போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : உறுதிமொழி ஏற்பு

0 304
Stalin trichy visit

திருச்சி, ஆக.12  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற உள்ள போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகர காவல் ஆணையர் காமினி,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.