அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு

0 333
Stalin trichy visit

திருச்சி, ஆக. 13  அதிமுக கழக உறுப்பினர் களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டை மாவட்ட செயலாளர் சீனிவாசன் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் , முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி  ஆணைக் கிணங்கவும், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி  வழி காட்டுதலின் படி திருச்சி மாநகர் மாவட்ட புத்தூர் பகுதி வார்டு எண் : 52, 52A, 53 மற்றும் 54 ஆகிய பகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் , முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் மற்றும் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் வனிதா, மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரோஜர், ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், 24வது வார்டு வட்ட செயலாளர் பாலையா மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.