காரில் கடத்திய 152 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

0 329
Stalin trichy visit

திருச்சி, ஆக. 26 திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 152 கிலோ புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் நேற்று பறிமுதல் செய் தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முக்கொம்பு பகுதியில் ஒரு கார் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி வருவதாக கிடைத்த தகவல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவிட்டார்.
இதன்பேரில், தனிப்படை காவல்துறையினர் முக்கொம்பு பகுதியில் நேற்று வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரில் 20 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட 152 கிலோ எடையிலான புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களையும், அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்திய காரையும் காவல்துறையனிர் பறிமுதல் செய்தனர். காரில் வந்த 2 பேர் மீதும் ஜீயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மு.மணிராஜ் (35), திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் ரங்கநாதபு ரத்தைச் சேர்ந்த பெ. தங்கமாயன் (54) என்பதும், இருவரும் புகையிலைப் பொருள்களை பல்வேறு இடங்க ளுக்கு கடத்திச்சென்று தொடர்ந்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 96,420 ரூபாயையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.