லால்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருச்சி, ஆக. 27 இலால்குடி சட்டமன்ற தொகுதி, இலால்குடி ஊராட்சி ஒன்றியம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தரபாண்டியன் ஆங்கரை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்வை தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் அளித்த புகார்களை, கோரிக்கைகளை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரைவில் தீர்வு காணும்படி வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் லால்குடி கோட்டாட்சியர் ,வருவாய் வட்டாட்சியர், ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்தி தேவி சண்முகநாதன் ,கலாதேவி அண்ணாதுரை ,சுந்தரி கலைவாணன், ராதிகா குமார் , ஒன்றிய குழு உறுப்பினர் செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.