சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் வாயிற் கூட்டம்

0 217
Stalin trichy visit

திருச்சி, செப். 10 சி ஐ டி யு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

சி ஐ டி யு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்த பேச்சு வார்த்தை கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள தமிழ்நாடு அரசு விரைவு பணிமனை முன்பு இன்று நடைபெற்றது. இந்த கோரிக்கை விளக்க வாயிற் கூட்டத்திற்கு எஸ் இ டி சி செயலாளர் ராமையா தலைமை தாங்கினார். சி ஐ டி யு மாநில துணைத்தலைவர் ஜெயராமன் மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கோரிக்கை விளக்க வாயு கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களாக வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கி தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரியும் ஓய்வு பெற்ற அன்றே பண பலன்கள் வழங்க கோரியும் அகவிலைப்படி உயர்வுடன் ஓய்வூதியத்தை முறைப்படுத்தி அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க கோரியும் ஊதிய முரண்பாடுகளை கலைந்து மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரியும் பேட்டா இன்சென்டீவ் மருத்துவ காப்பீடு வாரிசு வேலை காலி பணியிடங்களை நிரப்புவது காண்ட்ராக்ட் முறை ரத்து உள்ளிட்ட கூட்டமைப்பு வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒப்பந்த பேச்சு வார்த்தை கோரிக்கை விளக்க வாய் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.