துறையூரில் கிராமத் திட்ட புத்தாக்க பயிற்சி

0 218
Stalin trichy visit

திருச்சி, செப் 27 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாரம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி கிராமமான கொல்லப்பட்டியில் விதை கிராமத் திட்ட புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை துறையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குமீர் ரவி தலைமையேற்று, நீர் மேலாண்மை,குறைந்த அளவு நீரில் அதிக மகசூல், அதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானம், பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் அய்யாரு உப வடிநில மேம்பாட்டு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விதை கிராமத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் மானியங்கள், வேளாண் விரிவாக்கம் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகள் விபரம் பற்றி கூறி பயிற்சி அளித்தார். மண்ணச்சநல்லூர் விதை சான்று அலுவலர் ரமேஷ் , ரசாயன உரங்களையும் மருந்துகளையும் தவிர்த்து இயற்கை முறையில் கிடைக்கும் தொழு உரம் அதனுடன் உயிர் உறங்கான அசோஸ்பைரெல்லாம், பாஸ்போபேக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா துத்தநாக பாக்டீரியா மற்றும் எதிரி உயிர்களான சூடோமோனாஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை கலந்து இடுவதன் மூலம் மண்ணில் அங்கக சத்தின் அளவை அதிகரிக்கலாம் என்றும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆடுதுறை 54, கோ 50, கோ 55 ஆகிய விதைகளையும், பாரம்பரிய நெல் ரகங்களான சீரக சம்பா தூய மல்லி விதைகளையும் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிகமாக மகசூல் பெறலாம் என்று கூறி பயிற்சி அளித்தார். துறையூர் வட்டார வேளாண்மை அலுவலர் கமல் பசுந்தால் ஒரு பயிர்களான தக்கை பூண்டு சனப்பு, கொழிஞ்சி, அவுரி ஆகியவற்றை சாகுபடி செய்து மடக்கி உழுவதன் மூலம் நிலத்தில் ரசாயன உரங்களின் எச்சங்களை விளக்கி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மனோகரன் விரிவாக்க மய்யத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நுண்ணூட்ட கலவைகள், ஜிப்சம் அதற்கு அரசு வழங்கும் மானியம் பற்றி எடுத்துக் கூறி பயிற்சி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.