மணப்பாறையில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருச்சி, செப். 30 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிற்பகல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக நேற்று காலை இதுகுறித்து அறிவிப்பு இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் இனிப்புகள், பட்டாசு வெடித்து கொண்டாடினர் அதன் ஒரு பகுதியாகதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுகவினர் பேருந்து நிலையம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ண கோபால், நகர செயலாளர் மும.செல்வம், பொனானம்பட்டி பேரூர் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, வையம்பட்டி ராஜேந்திரன், சீரங்கன், ஒன்றிய சேராமன் அமிர்தவள்ளி உள்ளிட்ட திமுகவகனர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.