சொத்து தகராறில் தங்கையை வெட்டிய அண்ணன் தப்பியோட்டம்

0 339
Stalin trichy visit

திருச்சி, அக். 2  திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தப்புடையான் பட்டியைச் சேர்ந்த முருகேசன் மனைவி தமிழரசி (48) .இவரது அப்பா ஆறுமுகம் (65) . இவர்களது பூர்வீக இடத்தை ஆறுமுகத்தின் மகன் முருகேசன் விற்று தருமாறு கேட்டுக் கொண்டிருக்கும்போது இடம் விற்று அண்ணனுக்கு பணம் கொடுத்தால் பாதி பணத்தை எனக்கும் கொடுக்க வேண்டும் என தமிழரசி கூறியுள்ளார். அப்போதுதான் நான் பத்திரத்தில் கையெழுத்து விடுவேன் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அவரது தங்கை மற்றும் அப்பாவை வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து ஓடிவிட்டார் .மேலும் அருகில் இருந்தவர்கள் காயம் பட்டவர்களை மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தமிழரசிக்கு வலது பக்கம் காது மற்றும் இடது பக்கம் கன்னம் உள்ளங்கை ஆகிய பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழரசி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.