மஹாளய அமாவாசை : அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்

0 448
Stalin trichy visit

திருச்சி, அக்.2  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்நாளில், நதிக்கரையோரங்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த மூத்தோரின் ஆன்மா அமைதி பெற வேண்டி எள், தண்ணீ வைத்து தாப்பணம் அளித்தல், பிண்டம் வைத்து பரிகார வழிபாடுகள் செய்வது வழக்கம்.

அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் ஏராளமான மக்கள் இன்று அதிகாலை முதலே ஒன்று கூடி வாழை இலை, பூஜை சாமான்கள், அகத்திக்கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்று, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.

இதில் திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி, தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மாம்பழச்சாலை – ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.