ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

0 658
Stalin trichy visit

திருச்சி, அக். 3 திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர்  R.வின்சென்ட்  மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக குற்றத் தடுப்பு நடவடிக்கையாக அரியமங்கலம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2050 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றியும் அரிசியை கடத்தி வந்து மறைத்து வைத்திருந்த அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த  காஜா மொய்தீன் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்து வருகிறார். இவரின் தொடர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்ததன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர்  காமினி  குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணை பிறப்பித்ததன் பேரில் திருச்சி மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக உள்ள காஜாமைதீனுக்கு குண்டர் தடுப்புக் காவல் ஆணை சார்பு செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.