அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
திருச்சி, அக். 4 திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் சொரியம்பட்டி ஆர்ச் பகுதியில் திருச்சி மண்டல பறக்கும் படை உதவி புவியியலாளர் மதன்ராஜ் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அரசு அனுமதியன்றி கிராவல் மண் அள்ளியது தெரிய வந்தது .அதனைத் தொடர்ந்து மண் அள்ளிக் கொண்டு சென்ற டிப்பர் லாரியை கைப்பற்றி வளநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து டிப்பர் லாரி மற்றும் அதன் ஓட்டுனர் மீது புகார் மனு கொடுத்தனர். புகாரினை ஏற்ற வளநாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.