தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
திருச்சி, மார்ச் 10 மணப்பாறை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று மணப்பாறை காவல் ஆய்வாளர் மணப்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தார் . அப்போது செவலூர் கிராமத்தைச் சேர்ந்த அழகு மகன் நல்லதம்பி என்பவர் மணப்பாறை மாட்டுச் சந்தை அருகே அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மணப்பாறை காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.