தமிழர்களை விமர்சித்த ஒன்றிய கல்வி அமைச்சர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி, மார்ச் 10 தமிழர்களை விமர்சித்த ஒன்றிய கல்வி அமைச்சர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து முசிறி அருகே தொட்டியத்தில் நகர செயலாளர்
விஜய் ஆனந்த் தலைமையில் திமுகவினர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்