மோப்ப நாய் பிரிவில் புதிதாக இணைந்த ‘சிலம்பு’
திருச்சி, மார்ச் 22 திருச்சி மாநகரில் போதை பொருட். களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்ப நாய் திருச்சி மாநகர காவல்துறையில் சேர்க்கப்பட்டது என்று திருச்சி மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக மோப்ப நாய் கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்பேரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகர காவல் துறைக்கு ஒரு (போதைப் பொருள் கண்டறியும் நாய்) மோப்ப நாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவுப்படி மோப்ப நாய் காவல் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நாய் பெல்ஜியன் மொலினோஸ் என்ற இனத்தை சேர்ந்த மோப்ப நாய் ஆகும். இதற்கு \\சிலம் பு\\” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாய்க்கு வருகின்ற ஜூன் முதல் நவம்பர் வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு திருச்சி மாநகரில் மோப்பநாய் படைபிரிவில் சேர்க்கபட்டு போதை பொருட்களை பதுக்கி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவிடவும், மாநகரில் போதை பொருள் சம்பந்தமான விசாரணை மற்றும் ஆய்விற்கும் பயன்படுத்தபட உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.