கரும்பு சாகுபடி முறை குறித்து விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா
திருச்சி, மார்ச் 22 அட்மா திட்டம் சார்பில் வெளி மாவட்ட அளவில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறை பற்றிய விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்தில் இருந்து கரும்பு ஆராய்ச்சி நிலையம் கடலூர் 20.03.2025 முதல் 21.03.2025 வரை 2 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா சென்று கரும்பு சாகுபடி முக்கியத்துவம், அதிக மகசூல் தரும் கரும்புகள், நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்கள், கரும்பில் களை மேலாண்மை, ஒரு பரு சீவல் நடவு, கரும்பில் சொட்டு நீர் பாசனம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு, ஒட்டுண்ணி அட்டைகள் கட்டுதல், சூரிய ஒளி விளக்கு பொறி வைத்தல்,கரும்பு இனப்பெருக்க முறை பற்றி நிலைய உதவி பேராசிரியர்கள் டாக்டர் ராஜகுமார், ஜெயச்சந்திரன், அனிதா, துரைசாமி நிலைய விஞ்ஞானிகள் லால்குடி வட்டார விவசாயிகளுக்கு விரிவாகவும் செயல் விளக்க திடல்கள் அழைத்துச் சென்று விரிவாக விளக்கி கூறினார்கள்.
இந்த கண்டுணர்வு சுற்றுலாவில் தச்சன்குறிச்சி, புதூர் உத்தமனூர்,மருதூர், நகர், பூவாளூர், கொப்பாவளி , சிறுமயங்குடி, காட்டூர் ஆகிய கிராமத்தில் இருந்து பல முன்னாடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சத்தியப்பிரியா , வேளாண்மை அலுவலர் கௌசல்யா, துணை வேளாண்மை அலுவலர் அய்யாசாமி, லால்குடி வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் சந்திரசேகர் விஸ்வநாதன் ராஜசேகரன் எடிசன் கவிதா பிரவீன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் , உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.