மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற இருவர் கைது
திருச்சி, ஏப்.3 மணப்பாறை அருகே 10 ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற இருவர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி மணப்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1 ம் தேதி பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவியிடம் பன்னாங்கொம்பு அருகே உள்ள பண்ணபட்டியைச் சேர்ந்த பார்த்திபன் (22), சீத்தபட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (23) ஆகிய இருவரும் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற நிலையில் மாணவி சப்தம் போடவே இருவரும் ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.