“பெல்” அண்ணா தொழிற்சங்கத்தின் 50வது ஆண்டு விழா
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதி, BHEL அண்ணா தொழிற்சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பங்கேற்று சிறப்புரையாற்றி முன்னாள் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், BHEL அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வில்லியம் பீட்டர், மாடசாமி ஆகியோருடன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் SS.ராவணன், SKD.கார்த்திக், நகரக் கழக செயலாளர் SP.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி கழகச் செயலாளர் S.பாஸ்கர் கோபால்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.