மகளிர் விடியல் பேருந்துகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய 9 மகளிர் விடியல் பயண பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்;ட நிர்வாக இயக்குநர் பொன்முடி, திருச்சி மண்டல பொதுமேலாளர் சதீஷ்குமார், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.