முக்கொம்பூர் மேலணையில் காவிரியில் 23 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
திருச்சி ஜுன்30 மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. மொத்த நீர்த்தேக்க உயரமான 120 அடியில் தற்போது நீர்மட்டம் 119.22 அடியாக உள்ளது. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று காலை வினாடிக்கு, 73,452 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 80,984 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 26,000 கனஅடி நீர் அணை மின் நிலையங்கள், 8 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 29) காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு 68,007 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.22 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த உயரமான 120 அடியில் தற்போது நீர்மட்டம் 119.22 அடியை எட்டியது. மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில், வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும். அதனால் காவிரி வழித்தட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி முக்கொம்பில் இருந்து 23000 கன அடி வீதம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கொள்ளிடத்தில் இன்னும். தண்ணீர் திறந்து விடவில்லை..இந்நிலையில் காவிரி கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறுமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்மட்டம்தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை தன் உச்சகட்ட நீர்மட்டமான 120 அடியை எட்டியுள்ளதால், உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. எனவே சேலம் ஈரோடு கரூர் நாமக்கல் திருச்சி அரியலூர் தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகை கடலூர் ஆகிய 11 மாவட்ட கலெக்டர்கள் மூலம் அந்தந்த மாவட்டம் முழுவதும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.