டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

0 290
Stalin trichy visit

திருச்சி ஜூலை 19- திருச்சி சங்கரன் பள்ளி ரோடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் ( வயது 55) இவர் சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவர் டாஸ்மாக் கடையில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் வடிவேல்- யிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இது தொடர்பாக வடிவேல் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்த போது அவர் பெயர் சதீஷ்குமார் (வயது 25) சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் தான் வடிவேலை மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்தார் என்று தெரிய வந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.