திரைப்படத்திற்கு “ரிவியூ” அவசியம் : ஜென்ம நட்சத்திரம் திரைப்பட குழு பேட்டி

0 228
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 21  படத்திற்கு Review அவசியம் ; அதுதான் திரைப்படத்திற்கான வெற்றி சூட்சுமம் …. நடிகர் விஷால் புதிய திரைப்படங்களை ரிவ்யூ செய்யக்கூடாது என கூறியிருந்த நிலையில் ஜென்ம நட்சத்திரம் திரைப்பட குழுவினர் அதிரடி பேட்டி ….

மணி வர்மன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜென்ம நட்சத்திரம்.இந்த படத்தில் கதாநாயகனாக தமனும்,நாயகியாக மால்வி மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ரசிகரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. வேல. ராமமூர்த்தி இதில் அரசியல்வாதியாக நடித்துள்ளார். படம்  சனிக்கிழமை  வெளியான நிலையில் படக்குழுவினர் ப்ரமோஷனுகாக நேற்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள LA திரையரங்கில் ரசிகர்கள் முன் தோன்றி அவர்களுடன் உரையாடினர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த படக்குழுவினர்…

படம் ஏகோபித்த வெற்றி பெற்றுள்ளது. ஒரு படத்திற்கு Review  மிக அவசியம்.
பெரிய பட்ஜெட்டில், புகழ்வாய்ந்த பெரிய நடிகைகள் நடிகர்கள் நடித்த படங்களுக்கு கூட Review முக்கியமானதாக உள்ளது என்றனர்.

நடிகர் விஷால் தியேட்டர்களில் Reviewகூடாது என வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் பட குழுவினர் Review தான் படத்தின் வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கின்றனது

படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளது இந்த படத்தில் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்கிறா வண்ணம் வரலாறு படைக்க கூடிய அளவில் உள்ளது.

சாத்தான் பூமிக்கு வருவது எப்படி என்பது குறித்தும் அது வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் இரண்டாம் பாதியில் கூற இருக்கிறோம்.

உலகத்தில் எந்த மொழியில் படம் வந்தாலும் அந்த படம் எதிலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர் அது நன்றாக இருக்காது. பேய் படம் என்றால் பயமுறுத்துவதையே தனுசு தினுசாக செய்ய வேண்டியது உள்ளது. இரண்டாவது பாகம் ஜென்ம நட்சத்திரம் இதே போன்ற இருக்காது வேறொரு கதை களம் இறக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.