பெட்ரோல் குண்டு வீச்சு: காவல்துறையினர் விசாரணை

0 127
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 21  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த தங்கராஜ் மனைவி உசைனா (35) கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உசைனாவின் கணவர் இறந்துவிடவே உசைனா தனது தாயார் ஆயிஷா மற்றும் மகன் கிருத்திக்ரோஷனுடன் வசித்து வந்துள்ளார்.

மண்ணச்சநல்லூரில் உசைனா குடியிருந்து வரும் வீட்டின் அருகில் தமிழ்ச்செல்வி என்பவர் குடியிருந்து வந்துள்ளார். அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக இறந்துபோனதால் வாரிசு யாரும் இல்லாததால் தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு உரிமைகோரி அவரது அக்கா மகளான பிச்சாண்டார் கோவிலைச் சேர்ந்த வினோதினி என்பவர் தமிழ்செல்வியின் வீட்டை தன் வசப்படுத்தி கொண்டதாக தெரிகிறது.

இறந்துபோன தமிழ்செல்வியின் வீட்டில் கடந்த 9 மாதங்களாக ஜானு என்ற திருநங்கை வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த அவர் ஜூலை மாதம் வீட்டை காலி செய்துள்ளார்.

இந்நிலையில் வினோதினி மண்ணச்சநல்லூர் வீட்டிற்கு வரும்போது எல்லாம் உசைனாவை சந்தித்து நலம் விசாரித்து செல்வததை வழக்கமாக வைத்துள்ளார்.

வினோதினியின் உறவினர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் மேற்படி வீட்டிற்கு உரிமை கொண்டாடி வினோதினிக்கு ஆதரவாக இருந்த உசைனாவை நீதாண்டி வினேதிதினிக்கு சப்போர்ட் பன்ற உன்னைகொல்லாமல்  விடமாட்டேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு 10.30 மணியளவில் உசைனாவின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வீட்டின் முன்பக்க கேட்டிலும் அவரது தாயார் வசித்து வந்த பக்கத்து வீட்டு வாசலிலும் வீசி உள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உசைனா நடந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து உசைனா கொடுத்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.