கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கழுத்து நெரித்து கொலை
திருச்சி, ஜீலை 21 மணப்பாறை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கழுத்து நெரித்து கொலை போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் இன்று காலை இளம்பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இறந்தவர் கழனிவாசல்பட்டியைச் சேர்ந்த சுகன்யா (30) என்பதும் இரண்டு திருமணம் செய்து கணவர்களை பிரிந்து விட்ட நிலையில் வேரு ஒரு வாலிபருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததாகவும், இருப்பினும் மற்ற நபர்களுடன் பேசி வந்ததால் கள்ளத் தொடர்பில் இருந்த வாலிபர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறும் நிலையில் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.