ஜாதி ஆவண படுகொலையை கண்டித்து சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 218
Stalin trichy visit

திருச்சி, ஆக.4  மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சியின் இளைஞர் அமைப்பான புரட்சிகர இளைஞர் கழகம் (RYA) சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே தூத்துகுடி இளைஞர் செல்வகணேஷ் படுகொலையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சியின் இளைஞர் அமைப்பான புரட்சிகர இளைஞர் கழகம் (RYA) சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே தூத்துகுடி இளைஞர் செல்வகணேஷ் படுகொலையை கண்டித்தும், தமிழத்தில் ஜாதி ஆவணபடுகொலையை கண்டித்தும், தமிழகத்தில் தொடரும்  ஜாதி மோதல் பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டும்,
தமிழகஅரசு ஆவணபடுகொலையை தடுக்க சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிகண்டன், பாலகுமரன், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்புரையாக புரட்சிகர  இளைஞர் கழக மாநில தலைவர் சுந்தர்ராஜ் மற்றும்  சி.பி.ஐ. (எம்.எல்)
மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஞானசேசிகன், AlCCTU மாநில துணை தலைவர் ரவி,
நகர செயலாளர் பாலு, ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்,
மாவட்டகுழு உறுப்பினர்கள் மெக்கானிக் இளையராஜா, தங்கராஜ், மாசிலாமணி, கருப்பையா, ராமாயி, நகரகுழு உறுப்பினர்கள் கோகுல், ஷாஜகான், சங்கர்ராஜ், அறிவழகன், AICCTU ஆட்டோ சங்க செயலாளர் RV. கமல், பொருளாளர்  MS ராயப்பன்,
R.பிரபாகரன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்,

Leave A Reply

Your email address will not be published.