10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

0 156
Stalin trichy visit

திருச்சி ஆக 8 – திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் ஸ்ரீநாத் சரியாக படிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று விட்டிற்கு வந்த ஸ்ரீநாத்யை சரியாக படிக்க வில்லை  என்று கூறி அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டின் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய ஸ்ரீநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.