விநாயகர் சதுர்த்தி விழா : திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொடி அணி வகுப்பு
திருச்சி, ஆக.27 திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலத்தை பாதுகாப்புடன் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
திருச்சி மாநகரில் 29-ம் தேதி விநாயகர் சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரத்தில் காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடத்திட உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நேற்று காலை, அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துணை ஆணையர் தெற்கு அவர்களின் தலைமையில் லிருந்து தொடங்கி, காமராஜ் நகர் ராஜவீதி, ..நாயுடு தெரு, ..4 வழியாக பிரகாஷ் மஹால் மைதானத்தில் கொடி அணிவகுப்பு முடிவுற்றது.
மேலும் மாலை, உறையூர் காவல்நிலையத்திலிருந்து தொடங்கி, நாச்சியார்கோவில் சந்திப்பு, டாக்கர் ரோடு, காளையன் தெரு, நாடார் தெரு, பாண்டமங்கலம் முஸ்ஸிம் தெரு, புதிய பணிக்கன்தெரு, நாச்சியார் பாளையம் பாண்டமங்கலம் அரச மரத்தடி வழியாக உறையூர் காவல்நிலையத்தில் கொடி அணிவகுப்பு முடிவு பெற்றது. மேலும் இக்கொடி அணிவகுப்பில் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.