நவல்பட்டில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக் கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு
திருச்சி, செப்.6 வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி-யை தலைமை செயலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் வேண்டி கோரிக்கை மனு அளித்தார்.
தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் ஐம்பத்தாயிரத்திற்கும் மேலான சாமானிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கிறது. அதை நிறைவேற்றிடும் வகையில் எனது தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் குறைந்தபட்சம் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித் தர ஆவண செய்யுமாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.