நூறு நாள் வேலை, கூலி கேட்டு ஆர்ப்பாட்டம்
திருச்சி, செப்.10 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்தியாவின் 14 கோடி தொழிலாளர்களின் மாபெரும் வேலை வாய்ப்புத் திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் மோடி அரசே, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ. 2.50 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்க, விபத்தில் இறக்க நேரிடும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.10 லட்சம் வழங்குக, இ.எஸ்.ஐ. பி.எஃப் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்துக, வேலை கோரும் அனைவருக்கும் 100 நாட்கள் முடியும் வரை தொடர்ந்து பணி வழங்குக, தினக்கூலி ரூ. 336/- தினக்கூலியை குறைக்காதே, கிராமப்புற பொருளாதாரத்தை பாழாக்காதே, வேலை செய்ய மண்வெட்டி, இருப்பு தட்டு, கடப்பரை போன்ற தளவாட கருவிகள் வழங்கு, தூய்மையான குடிநீர், நிழல் கூடாரம். மருத்துவ உதவி பணித்தளத்தில் இருப்பதை உறுதி செய்க, பணி முடிந்த 15 நாட்களில் ஊதியம் வழங்குக,
கால தாமதமாக வழங்கும் ஊதியத்திற்கு சட்டப்படி வட்டி சேர்த்து வழங்குக,
மாதக்கணக்கில் வேலை கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திடுக உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.தொ.ச. மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம்,கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரா.மாருதி சக்தி தலைமை வகித்தனர். த.வி.ச.மாவட்டச் செயலாளர்நடராஜன்,அ.இ.வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன்
N.சுப்பிரமணியன் CPI (M) மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன் CPI (M) கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன் நல்லையன் வி.தொ.ச.மேற்கு ஒன்றிய தலைவர்
த.வி.ச.ஒன்றியச் செயலாளர் ஜெயலலிதா , வி.தொ.ச. கிழக்கு ஒன்றிய தலைவர்
மனோகர் த.வி.ச. ஒன்றிய தலைவர் மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ராணி மற்றும் வன்னிமுத்து, மதியழகன்,செல்வி, .பூசையம்மாள்.செல்வராஜ்,சக்திவேல், ஆலம்,ஜெயராணி,
ஜோதிபாசு,பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.