லிப்ட் அறுந்து விழுந்ததில் பெண் தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்
திருச்சி, செப்.12 திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மயிலம் சந்தையில் செயல்பட்டு வரும் ஒரு ஹார்டுவேர் கடையில் இன்று காலை லிப்ட் அறுந்து விழுந்ததில் அந்த கடையில் வேலை பார்த்த பெண் தலை நசுங்கி பரிதாமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.