ரயிலில் அடிப்பட்டு பெண் மயில் உயிரிழப்பு
திருச்சி, செப். 12 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலவாளடியில் ரயில்வே தண்டவாள பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த பெண் மயில் திருச்சியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் மோதிய விபத்தில் இரண்டு துண்டுகளான உடல் சிதறி பலியானது. தகவல் அறிந்து வந்த அப்பாத்துரை கிராம நிர்வாக அலுவலர் கஸ்பார் இறந்து கிடந்த பெண் மயிலை பார்வையிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
ரயிலில் மோதி பெண் மயில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது