மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

0 200
Stalin trichy visit

திருச்சி, அக்.2 மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி முகமூடி அணிந்து மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

காந்தி பிறந்த நாளான முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கத்தினர் திருச்சியில் காந்தி முகமூடியை அணிந்து கொண்டு மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தினர். சத்திரம் பேருந்து பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மதுவிலக்குக்கு ஆதரவு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, குமரன், கனகராஜ், சந்துரு, வெங்கடேஷ், மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.