லால்குடி அரசு கல்லூரியில் அகில இந்திய வானொலியின் கல்லூரி கலாட்டா
திருச்சி மாவட்டம் குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலாட்டா நிகழ்வை அகில இந்திய வானொலி நிலையம் நடத்தியது. கடி ஜோக்ஸ்,நகைச்சுவை, கவிதை, சிறுகதை, குழுப்பாடல்,பலகுரல் நிகழ்வை நடத்தி பதிவு செய்து.ஒலிபரப்பியது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் T.ஜீவன், ரேடியோ ஜாக்கி எம்.பி.லாவண்யா ஆகியோர் மாணவர்களின் நிகழ்ச்சிகளை அகில இந்திய வானொலி சார்பாக பதிவு செய்தனர். கல்லூரியில் கலைத்திருவிழா நிகழ்வும் நடந்தது. கலைப் படைப்புகளை உருவாக்குதல், நெருப்பில்லாமல் சமைத்தல் ஆகிய போட்டிகள் கல்லூரியில் நடந்தன. கல்லூரி முதல்வர் த.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.