ஓய்வுபெற்ற விஏஓ சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம்
திருச்சி, அக்.13தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடைபெற்றது.
TNVAO சங்கத்தின் நிறுவனர் இரா.போசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
எதிர்வரும் நவ.14 அன்று, VAO தினம் உள்ளிட்ட ஐம்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது, மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்துத் தர அரசிடம் கோருவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் துரைராசு, சிவஞானம் மற்றும் மாநில நிர்வாகிகள பலரும் பெருந் திரளாகக் கலந்து கொண்டு தங்கள் கருத்துரைகளை வழங்கினர்.