வாலிபரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்

0 191
Stalin trichy visit

திருச்சி அக் 22- திருச்சி கருமண்டபம் சமத்துவ நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 39) இவர் தீபாவளி அன்று திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்துக் விட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது
ரெயில்வே ஜங்ஷன் எதிரில் அவரை வழிமறித்த மர்ம ஆசாமி ஒருவர் சுகுமாரை தாக்கி அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 500 பணத்தை திருடிக் கொண்டு சுகுமாரை கீழே தள்ளிவிட்டு அவருடைய இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

இது குறித்து சுகுமார் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றார்.

இந்நிலையில் திருட்டுப் போன இருசக்கர வாகனம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கரூர் பைபாஸ் சாலை பகுதியில் அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டத்தை கண்டுபிடித்து
போலீசார் அங்கு சென்று இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.