அன்பில் அறக்கட்டளை – அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

0 121
Stalin trichy visit

திருச்சி, அக் 28 அன்பில் அறக்கட்டளை, அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவமுகாம் நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதியில் மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருவெறும்பூர் வேங்கூர் நாக திருமண மண்டபத்தில் வேங்கூர் , நடராஜபுரம், அரசங்குடி, முறுக்கூர், கூத்தைபார், பகுதியில் வசிக்கும் மக்களுக்காக துவக்கி வைத்தார்.

முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை நடைபெறுகிறது பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது . முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி மருத்துவர்கள் சுரேஷ், தமிழரசன், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.