முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

0 109
Stalin trichy visit

திருச்சி, அக்.31 திருச்சி மாவட்டம் முசிறிசார் ஆட்சியர் அலுவலகத்தில் சார ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் தேர்தல் முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர்தொட்டியம் தமிழ்ச்செல்வன் முசிறி சமூக நல வட்டாட்சியர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். முசிறி தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் சேர்த்தல் குறித்து அனைவரிடமும் கூறினார்.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்த படிவங்களை சமர்ப்பிப்பார்கள்.அதை பூர்த்தி செய்து அவர்களிடமே வழங்க வேண்டும்.இறந்த வாக்காளர்கள் பெயர் குறித்து படிவம் பூர்த்தி செய்யப்படாமல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இந்தபடிவங்கள் வழங்கி பூர்த்தி செய்யவும் அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு செய்ய வேண்டும்என கேட்டுக்கொண்டனர்.அப்போது படிவங்களை கட்சியினர் வருஷம் வழங்கக் கூடாது வெளி மாநில வாக்காளர்களை சேர்க்கக்கூடாது எனகட்சியினர் வலியுறுத்தினர்.வாட்ஸ் அப் குழு உருவாக்கும்போது மூன்று ஒன்றியத்தில் உள்ள கட்சியினர் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.கூட்டத்தில் அனைத்து கட்சியினர்கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.