அரசு மருத்துவமனையில் பெண் பாதுகாவலர் செல்போன் திருடியவர் கைது
திருச்சி நவ .13 திருச்சி திருவரங்கம் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி ( 46 ) திருச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சாந்தகுமாரி அரசு மருத்துவமனை புது கட்டிடம் அருகே ரோந்து சென்றார். அப்போது அங்கிருந்த அவரது கைப்பையில் இருந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடி செல்ல முயன்றார். அப்போது அவரை சாந்தகுமாரி கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.போலீசாரின் விசாரணையில் அவர் குழுமணி மேல தெருவை சேர்ந்த செந்தூர் முருகன் ( 31 ) என்பது தெரிந்தது .அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.