மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி நவ .13 திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (32). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் .குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி அவரை பிரிந்து சென்றார்.
இதனால் மன உளைச்சலில் தினமும் மது குடித்து வந்தார்.இந்நிலையில் மதன் குமார் நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து,உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.