பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆதார் சிறப்பு முகாம்

0 166
Stalin trichy visit

திருச்சி நவ 17 இந்திய அஞ்சல் துறை, மத்திய மண்டலம், திருச்சி சார்பாக சிறப்பு ஆதார் முகாம், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெறுகிறது. பொது மக்கள் நலன் கருதி அனைவரும் பயன்பெற ஏதுவாக இந்த முகாம் மக்கள் கூடும் இடமான பேருந்து முனையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் புதுப்பித்தல் மற்றும் ஆதார் திருத்தம் போன்ற சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆதார் புதிதாக எடுக்க கட்டணம் இல்லை. தேவையான ஆவணம் -குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் செய்ய ரூபாய் 75/- புகைப்படம் மற்றும் கைரேகை மாற்ற ரூபாய் 125/-.பெயர் மாற்றம் செய்ய பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய திருமண சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் கார்டு, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்.
பிறந்த தேதி மாற்றம் செய்ய பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் முகவரி மாற்றம் செய்ய பாஸ்போர்ட், தபால் நிலைய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆயுள் காப்பீட்டு சான்றிதழ், மூன்று மாதத்திற்கு உட்பட்ட மின்கட்டணம் பில், கேஸ் பில் மற்றும் குடிநீர் வரி ரசீது. மேற்கூறிய ஆவணத்தில் ஏதேனும் ஒன்று அசல் ஆவணம் மாற்றம் ஏற்றாற்போல் கொண்டு வர வேண்டும்.
இந்த பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் நடைபெறும் ஆதார் முகாம் அரிய வாய்ப்பை, பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய அஞ்சல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.