விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது
திருச்சி நவ 19 திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சீட்டு விளையாட வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருவனந்தம் தலைமையில் போலீசார் அந்த விடுதிக்கு சென்று அறையில் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு அறையில் ஆறு பேர் கொண்ட கும்பல் அமர்ந்து சீட்டு விளையாடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருவனந்தம்
தலைமையிலான போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ஜீயபுரம் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 34 ) லால்குடியை சேர்ந்த ஆன்டோ ஜாக்சன் ரோஸ் (வயது 35), சங்கர் (வயது 46), சரவணன் (வயது 33), டோல்கேட் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 29), காட்டூர்ரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35)
ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 22 ஆயிரத்து 150 பணம் மற்றும் 152 சீட்டுகள்,மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு பேரையும் ஜாமீனில் விடுதலை செய்தனர்.