திருச்சி தெற்கு மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எஸ்.ஐ.ஆர் சிறப்பு முகாம் : மாநகர செயலாளர் மு.மதிவாணன் அறிக்கை
திருச்சி,நவ.22 திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் “SIR” சிறப்பு முகாம் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு.
இதுகுறித்து வெளியிட்டுள்ள மாநகரச் செயலாளர் மண்டல தலைவர் மு. மதிவாணன் அறிக்கையில்,
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலில்படி, திருச்சி கிழக்கு மாநகரத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR சிறப்பு முகாம் 22.11.2025, சனிக்கிழமை 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் SIR வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பகுதி செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட அனைத்து பாகத்துக்குரிய BLA-2 வாக்காளர்களை சேர்க்கும் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.