சமயபுரம் ஆட்டுச்சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாக வி.சி.க. குற்றச்சாட்டு
திருச்சி, நவ.22 சமயபுரம் ஆட்டுச்சந்தையில் முறைக்கேடு – நேரத்தை மாற்றி திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றச்சாட்டு.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை காலம் காலமாக நடைபெறுவது வழக்கம் அதிகாலை 3 மணிக்கு துவங்கும் ஆட்டுச் சந்தையில் மத்தியம் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இங்கு திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி திண்டுக்கல் அரியலூர் பெரம்பலூர் முசிறி தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆடு விற்பனையாளர்கள் வந்து விற்பனை செய்வது வழக்கம் ,இந்நிலையில் தற்போது வார சந்தையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பலரும் குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி தொடங்கி ஆட்டுச் சந்தை அதிகாலை 3:00 மணிக்கு ஆடு விற்பனை இருட்டில் முடிந்து விடுவதாகவும் இதனால் திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் சீட்டு வசூல் என்ற பெயரில் ஆட்டுக்கு 80 ரூபாய் என விற்பவர்மிடம் வாங்குவோருமிடம் 80 ரூபாயும் வசூல் செய்து வருகின்றனர் மற்றும் வாகனத்திற்கு 150 முதல் 200 ரூபாய் வரை வசூல் செய்து இதற்கு முறையான ரசிதுகள் வழங்கப்படுவதும் இல்லை.
ஆனால் வசூல் செய்தாலும் அங்கு போதிய எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை முக்கியமாக கழிப்பறை ,மின் விளக்குகள் ,சாலை வசதி இல்லை என சமயபுரம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மற்றும் பேரூராட்சி தலைவர் அவரிடம் கேட்ட பொழுது காலம் காலமாக சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து மதியம் மூன்று மணி வரை நடைபெறும் ஆனால் தற்பொழுது ஏலம் எடுத்தவர்கள் நாங்களும் பல ஆலோசனைகளை வழங்கியும் இவ்வாறு செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர் .
ஏலம் எடுத்தவர்களின் முறைகேடுகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ,பேரூராட்சி தலைவர் துணை போகிறார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.