பணியாளரின் இல்ல விழாவில் பங்கேற்ற கல்விக் குழும அதிபர்

0 558
Stalin trichy visit

திருச்சி, டிச.20  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பணியாளரின் இல்ல காதணி விழாவில் பங்கேற்க வந்த கல்விக் குழுமத்தின் அதிபருக்கு 100 கிலோ பூக்களை தூவி வரவேற்ற நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாகியது.

மண்ணச்சநல்லூர் அருகே குணசீலம் ஊராட்சியை சேர்ந்தவர் செல்லம் ரவீந்திரன் இவரது மனைவி இந்தியசாந்தி. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள எஸ். என்.எஸ் கல்வி குழுமத்தின் தாளாளராகவும்,கல்லூரி தொழில்நுட்ப இயக்குநராகவும் பதவி வகிப்பவர் முனைவர் நளின் விமல் குமார். இந்தக் கல்வி குழுமத்தின் அலுவலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பு ஆலோசராக பணிபுரிபவர் செல்லம் ரவீந்திரன்.

இந்நிலையில் செல்லம் ரவீந்திரன்,இந்தியசாந்தி தம்பதியின் மகன் சக்தி பிரணவ்.இவர்களின் இல்ல காதணி விழா குணசீலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழா எஸ். என். எஸ் கல்விக் குழுமத்தின் தாளாளர் நளீன் விமல் குமார் தலைமையில்,ராதா (member juvenile justice board) முன்னிலையில் நடைபெற்றது. செல்லம் ரவீந்திரன் தம்பதி மற்றும் உறவினர்கள் கல்விக் குழுமத்தின் தாளாளருக்கு பரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதை அளித்து ஜேசிபி இயந்திரம் மூலம் 100 கிலோ பூக்களை தூவி வரவேற்றார்.

இந்நிகழ்வு விழாவிற்கு வந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்த கானொலி காட்சிகள் இணையதளத்தில் பரவி வைரலாகி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாகியது.

Leave A Reply

Your email address will not be published.