மணப்பாறை அருகே ஆபத்தான முறையில் இயங்கி வரும் அரசு பள்ளி கட்டித்தை சீரமைக்க கோரிக்கை

0 224
Stalin trichy visit

திருச்சி, டிச.20 மணப்பாறை அருகே ஆபத்தான முறையில் இயங்கி வரும் அரசு பள்ளி கட்டித்தை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அடைக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். 1993 -94 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சிதிலமடைந்ததை அடுத்து கடந்த 2018- 19 ம் நிதிஆண்டில் 2.40 லட்சம் செலவில் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் பெய்த மழையால் பள்ளிக்கட்டித்தின் பல்வேறு பகுதியில் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சமீபத்தில் தான் கட்டிடம் மீண்டும் பழுது பார்க்கும் பணி நடைபெற்ற நிலையில் பள்ளிச்சுவர் மற்றும் கட்டிடத்தின் பல இடங்கள் மிகவும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் அச்சத்துடனே மாணவ – மாணவிகள் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் உடனடியாக பள்ளிக்கட்டிடத்தை சரிசெய்து புதிய சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.