சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

0 238
Stalin trichy visit

திருச்சி, டிச.22  திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. “விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கை வலியுறுத்தும் வகையில், பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

“சாலையில் பாதுகாப்பு – உயிருக்கு பாதுகாப்பு” (Road Safety – Life Safety) என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்தப் பேரணியில், சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி மேஜர் சரவணன் சிலை, ஐயப்பன் கோவில் வழியாக சென்று நீதிமன்றம் அருகே உள்ள ஜல்லிக்கட்டு சாலையில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருச்சி மண்டலம்).
துணை மேலாளர்கள் ராமநாதன், புகழேந்திராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.