மணப்பாறையில் தவெக மாவட்டச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு‌

0 134
Stalin trichy visit

திருச்சி, டிச.26  தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக மணப்பாறை கதிரவன் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் கதிரவன், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் அக்கட்சியினர் 5000 நபர்கள் புடை சூழ்ந்து வரவேற்பு அளித்து ஊர்வலமாக சென்றனர். மாரியம்மன் கோவில் முன்பு தாரை தப்பட்டை முழங்க கட்சியின் சட்டமன்ற தொகுதி, நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து மணப்பாறை மாரியம்மன் கோவில், பள்ளிவாசல், கிறிஸ்துவ தேவாலயம் ஆகியவற்றில் வழிபாடு நடத்தி பின் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்று பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.பொதுமக்கள்  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து  வரவேற்பு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.