திருவெறும்பூரில் ரூ.256.77 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 171
Stalin trichy visit

திருச்சி, டிச.29 திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ 256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 46 கொட்டப்பட்டு மந்தை திறந்த வெளி அரங்கம் ,வார்டு எண் 45 மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம்  மேலகல்கண்டார் கோட்டை வார்டு எண் 44 மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வார்டு எண் 42 ஆலந்தூர் மந்தை பிடிஎஸ் சென்டர் வார்டு எண் 39 கணேஷ் நகர் பகுதியில் புதிய மின்மாற்றி திறப்பு விழா, வார்டு எண் 40 அக்ரகாரம் பிடிஎஸ் சென்டர் திறப்பு விழா, வார்டு எண் 40 மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், ஒன்றிய காலனி வார்டு எண் 41 புதிய அங்கன்வாடி கட்டிடம் , காந்திநகர் இரண்டாவது வீதி வார்டு எண் 41 மாமன்ற உறுப்பினர் அலுவலகம், மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் தீனதயாளு நகர் வார்டு எண் 41 நொச்சி வயல்புதூர் பகுதியில் புதிய மின்மாற்றி , வார்டு எண் 42 அம்மன் நகர் பகுதியில் புதிய மின்மாற்றி , வார்டு எண் 38 நெய்குணம் மின்மாற்றி வார்டு எண் 38 ஆதி திராவிடர் பள்ளியில் ICDS ஐசிடிஎஸ் சென்டர் திருநகர் மேற்கு, வார்டு எண் 38 ஆதி திராவிடர் பள்ளியில் ICDS ஐசிடிஎஸ் சென்டர் திருநகர் வடக்கு, வார்டு எண் 36 ஸ்டாலின் நகர் பொதுக்கழிப்பறை ,வார்டு எண் 36 கொங்கு நகர் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் , வார்டு எண் 37 பழனியாண்டி தெரு நேருஜி நகர் மாமன்ற உறுப்பினர் அலுவலகம், மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் வார்டு எண் 16 அம்மாகுளம் கலைவாணர் தெரு பொது கழிப்பறை,
வார்டு எண் 16 விஸ்வாஸ் நகர் சோலார் லைட் , வார்டு எண் 42 எல்லக்குடி நூலகம் வார்டு எண் 38 ஆதி திராவிடர் பள்ளியில் ICDS ஐசிடி எஸ் சென்டர் திருநகர் வடக்கு (பேஸ் 2 )
வார்டு எண் 38 அண்ணாநகர், பிள்ளையார் கோவில் சோலார் மின் இணைப்பு தொடக்க விழா நடைபெற்றது விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்,தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன்
மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மாநகராட்சி அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன் உதவி ஆணையர் சரவணன் பகுதி  செயலாளர் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், சிவக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில், ரமேஷ்,கார்த்திக், தாஜூதின்,சீத்தாலட்சுமி பியூலா ,கோவிந்தராஜ், ரெக்ஸ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.